மானாமதுரையில் போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      சிவகங்கை
19 manamadurai police

மானாமதுரை-சிவகங்கை மாவட்டத்தின் முதல் போக்குவரத்து காவல்நிலையத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பிரன்சிங் மூலம் நேற்று திறந்து வைத்தார். போக்குவரத்து காவல் துறைக்கென தனியாக  காவல்நிலையம்  சிவகங்கை மாவட்டத்திலே எந்த ஊரிலும் கிடையாது. இந்நிலையில்  மானாமதுரையில்
56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக போக்குவரத்து கட்டப்பட்ட சிவகங்கை மாவட்டத்தின் முதலாவது போக்குவரத்து காவல்நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.  சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ரோகித்நாதன் புதிதாக திறக்கப்பட்ட மானாமதுரை போக்குவரத்து காவல்நிலையத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து மரங்கன்று நட்டு வைத்து பின்னர், மானாமதுரை போக்குவரத்து  காவல்நிலைய அலுவலக குறிப்பேட்டில் கையெழுத்திட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.எ.எஸ்.பி., முரளிதரன், மானாமதுரை டி.எஸ்.பி., கார்த்திகேயன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவசங்கர நாராயண் மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து