நத்தம் அருகே புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டில் 580 காளைகள் பங்கேற்பு- 21 பேர் காயம்

19 natham jalikkatu

 நத்தம்.- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி- புகையிலைப்பட்டியில் புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியர் உஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல்,திருச்சி, தேனி,மதுரை போன்ற மாவட்டங்கலிருந்து 580 காளைகளும், 446 மாடுபிடிவீரர்களும் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்ற போது மாடுபிடிவீரர்களுக்கு பிடியில் சிக்காமல் காளைகள் துள்ளி சென்றன. காளைகளை போட்டி போட்டு அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. அதே போல் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டது.  சைக்கிள்,அண்டா,பேன் ,தங்கம்,வெள்ளி காசுகள்,கட்டில்,பீரோ என பல பரிசுகள் வழங்கபட்டன.விழாவில் நத்தம் யூனியன் சேர்மன் கண்ணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு பாதுகாப்பிற்க்காக டி.எஸ்.பி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் பணியில்ஈடுபட்டிருந்தனர். இதில் மாடுபிடி வீரர்கள் 15 பேர் உள்பட  21 பேர் காயமடைந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து