முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் எம்.ஜி.ஆர். கல்லூரி சாதனை

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுபோட்டிகளில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி எம்.ஜி.ஆர்.கல்வியியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
 ராமநாதபுரத்தில் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வியியல் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவி ஆர்.அபிநயா 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசுபெற்று சாதனை படைத்துள்ளார். முதலாம் ஆண்டு மாணவி எம். மரிய நேசிகா ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார். போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரியின் தாளாளர் அ.நாசர் அலி, முதல்வர் முனைவர் சி.முத்து மற்றும் பேராசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து