முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவில் விமானங்கள் நேருக்கு நேர் மோதல்: 4 பேர் பலி

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

ஆஸ்திரேலியாவில் சிறிய ரக பயிற்சி விமானம் மற்றொரு விமானத்துடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் பலியாகினர்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியோ மாகாணத்தில் உள்ள மங்களூர் நகரில் தனியாருக்கு சொந்தமான விமான பயிற்சி மையம் உள்ளது. இங்கிருந்து நேற்று முன்தினம் காலை சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 2 பேர் இருந்தனர். இந்த விமானம் மங்களூர் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, எதிர் திசையில் வந்த மற்றொரு சிறிய ரக விமானத்துடன் நேருக்கு நேர் மோதியது. இதில் 2 விமானங்களும் அங்குள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கின. இந்த கோர விபத்தில் பயிற்சி விமானத்தில் இருந்த 2 பேரும், மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 2 பேரும் பலியாகினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக விமான பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து