முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவிநாசியில் நடந்த பேருந்து விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

அவிநாசியில் நடந்த பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சேலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசுப் பேருந்தும் கேரளாவிலிருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 19 பேர் பலியாகினர். படுகாயமடைந்தவர்களை திருப்பூர் அரசு மருத்துவமனையிலும் கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடியின் அலுவலக டுவிட்டர் பக்க பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்து குறித்த தகவலையறிந்து மிகுந்த துயரமடைந்தேன். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து