முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரசாந்த் கிஷோரின் தி.மு.க.வாக கருணாநிதியின் தி.மு.க. மாறி விட்டது - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : கருணாநிதியின் தி.மு.க. தற்போது பிரசாந்த் கிஷோரின் தி.மு.க.வாக மாறி விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கருணாநிதியின் தி.மு.க. தற்போது பிரசாந்த் கிஷோரின் தி.மு.க.வாக மாறிவிட்டது. தி.மு.க.வின் உண்மை முகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமியர்களுக்கு அ.தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பு வராது என முதல்வர் உறுதியளித்துள்ளார். அரசு சிறுபான்மையினருக்காக உத்தரவாதத்தையும் உறுதியையும் தைரியத்தையும் கொடுத்துள்ளது. எனவே, இதனை உணர்வுபூர்வமாக உணர்ந்து கொண்டு இஸ்லாமியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். அப்படிப் போராட்டத்தைக் கைவிடுவதுதான் நல்ல விஷயம். ஆனால், இதில் குளிர் காய நினைத்து தி.மு.க. அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. தி.மு.க., கழுகு பார்ப்பதைப் போல முஸ்லிம் மக்களின் வாக்குகளைக் கொத்திக் கொண்டு போக வலை வீசுகிறது. அதற்கு யாரும் இரையாகக் கூடாது என்பதுதான் என் கருத்து என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

முன்னதாக, அ.தி.மு.க.வுக்கான மக்கள் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொய் பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. முயற்சிக்கிறது என்றும், சமூக நல்லிணக்கத்தை காப்பாற்ற முஸ்லிம்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், குடியுரிமை சட்டம்  குறித்து முதல்வரும், துணை முதல்வரும் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக கேள்வி எழுப்பிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பதில் தரும் வகையில் மக்களை மத ரீதியில் தி.மு.க. பிரிக்கிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து குடியுரிமை சட்ட விவகாரத்தில் தி.மு.க. அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து