முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

72 - வது பிறந்த நாள் : சென்னையில் ஜெயலலிதா உருவச் சிலைக்கு இன்று இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு - தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை தலைமை கழகத்தில் உள்ள ஜெயலலிதாவின் திருஉருவசிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

 அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் அரும்பணியாற்றிய ஜெயலலிதாவின் 72 -வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சிக் கொடியினை ஏற்றிவைத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகின்றனர்.  அதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் ஜெயலலிதாவின் 72 - வது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிடுகின்றனர்.  ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கண் தானம், ரத்ததானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல், மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், இலவச திருமணங்களை நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.

இந்நிகழ்ச்சியில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள்,  மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி,  அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், கட்சியின் உடன்பிறப்புகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலரும் பெருந்திரளாக கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து