முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு: மான் கீ பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டிய பிரதமர்

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மான் கீ பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசினார். அப்போது நமது இளைஞர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் செலுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். 

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மான் கீ பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் நமது வேற்றுமையில் ஒற்றுமை என்பது, ஒட்டுமொத்த மனித இனத்திற்கே, மதிப்புமிக்க பொக்கிஷமாக விளங்குகிறது. இதனை நாம் பாதுகாத்து ஆராய வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து நமது இளைஞர்கள் ஆர்வத்துடன் பேசி வருகின்றனர். சந்திரயான்-2 விண்கலம் ஏவப்பட்ட நிகழ்ச்சியை பார்க்க இஸ்ரோ சென்ற போது, குழந்தைகளின் உற்சாகத்தை காண முடிந்தது. நமது இளைஞர்கள் மத்தியில், அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவப்படுவதை, ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து நீங்கள் நேரடியாக பார்க்கலாம்.. இதற்காக 10 ஆயிரம் பேர் அமரக் கூடிய வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்லுயிரியல் என்பது மதிப்பு மிக்க பொக்கிஷம்; அதை நாம் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

கேரளாவின் கொல்லத்தில் வசித்து வரும் பகீரதி என்ற பெண், 10 வயதாகும் போது பள்ளிப் படிப்பை பாதியில் விட்டார். தற்போது 105 வயதில், தனது படிப்பை மீண்டும் துவங்கியதுடன், 4-ம் நிலை தேர்வில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ள அவருக்கு நான் எனது மரியாதையை செலுத்துகிறேன். புலம்பெயர்ந்த உயிரினங்களுக்கான நிலையான வாழ்விடங்களை அமைக்க இந்தியா முயற்சி செய்கிறது. இதற்காக மேகாலயாவில், தனித்துவமான இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏன் 32 ரக விமானம், லே மாவட்டத்தில் குஷோக் பகுலா ரிம்போக்கி விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய போது வரலாறு படைக்கப்பட்டது. இந்த போர் விமானத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 10 சதவீத உயிரி எரிபொருள் பயன்படுத்தப்பட்டது. பழைய அணுகுமுறைகளை இன்னும் பின்பற்ற நமது புதிய இந்தியா விரும்பவில்லை. புதிய இந்தியாவில் நமது சகோதரிகளும், தாய்மார்களும் முன்னேறி செல்வதுடன், சவால்களை தங்களது கைகளில் எடுத்து கொள்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து