முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் டிரிப்பிள் ஜம்ப்பில் யூலிமர் ரோஜாஸ் சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

ஸ்பெயின் : மாட்ரிட் உள்ளரங்க தடகள போட்டியில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த யூலிமர் ரோஜாஸ் டிரிப்பிள் ஜம்ப்பில் உலக சாதனை படைத்தார்.

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மகளிருக்கான உள்ளரங்க தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் டிரிப்பிள் ஜம்ப்பில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த யூலிமர் ரோஜாஸ் 15.43 மீட்டர் நீளம் தாண்டி புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன்னர் கடந்த 2004-ம் ஆண்டு மார்ச் மாதம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் ரஷ்யாவின் டட்யானா லெபடேவா 15.36 மீட்டர் நீளம் தாண்டியதே சாதனையாக இருந்தது. இதனை தகர்த்து தற்போது புதிய சாதனையை யூலிமர் ரோஜாஸ் படைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து