ஆடுகளம் பேட்ஸ் மேன்களுக்கு சாதகமாக உள்ளது அஸ்வின்

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2020      விளையாட்டு
Ashwin 2020 02 23

வெலிங்டன் : வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்துக்கு டார்கெட்டை நிர்ணயிப்பது இன்னும் வெகுதூரத்தில்தான் இருக்கிறது என சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறுகையில், இந்த போட்டியில் எவ்வளவு ரன்கள் இருந்தால் நான்காவது இன்னிங்சில் நியூசிலாந்தை கட்டுப்படுத்த முடியும் என்று கேட்கிறீர்கள். இன்னும் ஆறு செசன் இருக்கிறது. பாதுகாப்பிற்கான சிறந்த ஸ்கோர் எது என்பதை நாங்கள் சொல்லும் இடத்தில் இல்லை. அதற்கான வெகுதூரத்தில் நாங்கள் உள்ளோம். ஆடுகளம் இன்னும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் உள்ளது. எவ்வளவு ஸ்கோர் அடித்தால் போதும் என்று நினைக்கக் கூடிய இடத்திற்கு இன்னு நாங்கள் வரவில்லை.

நாங்கள் ஒவ்வொரு செசன், ஒவ்வொரு மணி நேரம் என எடுத்துக் கொள்ள வேண்டும். எனினும் குறைந்த அளவு ஸ்கோரை எங்களால் நிர்ணயிக்க முடியும். ரகானே, விஹாரி சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். அவர்கள் இதே நிலையில் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டியது முக்கியமானது. விக்கெட் எப்படி இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும் என்பதால் அவர்கள் நிர்ணயிப்பார்கள் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து