வலைதளங்களில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த நமஸ்தே டிரம்ப் ஹேஸ்டேக்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020      இந்தியா
Namaste Trump 2020 02 24

சென்னை : அமெரிக்க அதிபர்  டிரம்ப் இந்தியா வந்துள்ளதை டுவிட்டரில் பலவித ஹேஸ்டேக்குளுடன் நெட்டிசன்கள் டிரண்ட் ஆக்கியுள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் முறையாக இந்தியா வந்தார். மேளதாளங்கள் முழங்க டிரம்புக்கு குஜராத்  பாரம்பரிய கலைஞர்கள் வரவேற்பு அளித்தனர். அகமதாபாத் விமானநிலையம் வந்தடைந்த அதிபர் டிரம்பை கட்டித் தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி.

இந்நிலையில், சமூக வலைதளம் முழுவதிலும் எங்கும் பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் புகைப்படங்களாக பரவிவுள்ளது. நமஸ்தே டிரம்ப் உள்ளிட்ட ஹேஸ்டேக்குகள் இந்திய அளவிலான டுவிட்டர் டிரண்டிங்கில் முதன்மை இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து