முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலின் எப்போதும் முதல்வர் கனவிலேயே இருக்கிறார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கு

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

கோவை : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் முதல்வர் கனவிலேயே இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தை பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பேணி காக்கப்பட்டு வருகிறது. இதனால் பெண்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனர். தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ்கின்றனர். பாதுகாப்பான நகரமாக சென்னை, கோவை உள்ளது. ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இருப்பதால் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் அச்சப்பட தேவையில்லை.  மத்தியில் தி.மு.க. அங்கம் வகித்த போதுதான் தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயர், இடையூறு ஏற்படுத்தவே தவறான செய்தியை தி.மு.க. பரப்பி வருகிறது. தேசிய மக்கள்  தொகை கணக்கெடுப்பில் 3 அம்சங்கள் குறித்து விருப்பப்பட்டால் சொல்லலாம்; இல்லையெனில் வேண்டாம். ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமையுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்ட கடனுக்கு தொடர்ந்து வட்டி கட்டி வருகிறோம். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் முதல்வர் கனவிலேயே இருக்கிறார். அ.தி.மு.க. அரசு நல்ல திட்டங்களை அறிவிப்பதால் ஸ்டாலினால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கே.சி.பழனிசாமி அ.தி.மு.க.வில் இல்லை; அவர் பல தவறுகளை செய்து சிறை சென்றுள்ளார். குடிமராமத்து திட்டம் வெற்றி பெற்றதால் மு.க.ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஊடகங்கள் பற்றி மிகவும் கீழ்த்தரமான வார்த்தையை ஆர்.எஸ்.பாரதி பயன்படுத்தியுள்ளார்.  மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு 7 பேரை விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினோம்.  தி.மு.க. ஆட்சியில் நளினியை மட்டும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  7 பேர் விடுதலை பற்றி கேட்க தி.மு.க.வினருக்கு எந்த தகுதியும் இல்லை. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து