முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐசிசி டெஸ்டில் முதல் தோல்வி தழுவிய இந்திய அணி

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி முதல் தோல்வியை தழுவி உள்ளது.

இந்திய அணி கடைசியாக 2018-19 ஆஸ்திரேலிய பயணத்தின் போது பெர்த் டெஸ்டில் (டிசம்பர் மாதம்) 146 ரன்னில் தோற்றது. தற்போது 13 மாதங்களுக்கு பிறகு டெஸ்டில் தோல்வியை தழுவியுள்ளது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி முதல் தோல்வியை தழுவி உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன் ஷிப் அறிமுகமானது.இதில் இந்திய அணி வெஸ்ட்இண்டீஸ் (2), தென்ஆப்பிரிக்கா (3), வங்காளதேசம் (2) தொடர்களை கைப்பற்றியது. 7 டெஸ்டில் வெற்றி பெற்று இருந்தது.தனது 8-வது டெஸ்டில் நியூசிலாந்திடம் தோற்றுள்ளது. இந்தியா 7 வெற்றி, 1 தோல்வியுடன் 360 புள்ளிகள் பெற்று ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து 2 வெற்றி, 4 தோல்வியுடன் 120 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.ஆஸ்திரேலியா (296), இங்கிலாந்து (146), பாகிஸ்தான் (140) ஆகிய நாடுகள் முறையே 2 முதல் 4-வது இடங்களில் உள்ளன.இலங்கை 6-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 7-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் 8-வது இடத்திலும், வங்காளதேசம் கடைசி இடத்திலும் உள்ளன

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து