டெல்லி கலவரம் கவலை அளிக்கிறது : ராகுல்காந்தி

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2020      இந்தியா
rahul gandhi 2020 02 25

புதுடெல்லி: டெல்லியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் போலீஸ்காரர் உள்பட 7 பேர் பலியானது குறித்து ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதல் கலவரமாக வெடித்தது.இதில் போலீஸ்காரர் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். இந்த கலவரம் கவலை அளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறி உள்ளார்.

இது தொடர்பாக ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-டெல்லி கலவரம் மிகவும் கவலை அளிக்கிறது. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அமைதி வழி போராட்டம்தான் தீர்வே தவிர வன்முறையால் எந்த தீர்வும் கிடைக்காது.வன்முறையை கைவிட்டு கலவரக்காரர்களிடம் இருந்து டெல்லிவாசிகள் விலகி இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து