சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 200 கி.மீ தூரத்திற்கு உற்சாக வரவேற்பு

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2020      தமிழகம்
CM Approved Photo 2020 02-26

தஞ்சாவூரில் நேற்று காலை நடைபெற்ற அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி காலை 6 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அதனை தொடர்ந்து சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் முதல்வர் பழனிச்சாமிக்கு 200 கி. மீ தூரத்திற்கு டெல்டா விவசாயிகள் வாழை, வெற்றிலை விவசாயிகள், பொதுமக்கள், அ.தி.மு.க.பிரமுகர்கள், தொண்டர்கள் வழி நெடுகிலும் ஊற்சாக வரவேற்பு அளித்தனர். பல்வேறு இடங்களில் பெண்கள் கும்ப மரியாதை வரவேற்பு கொடுத்தனர்.

சேலம் மாவட்டம் மல்லூர், திருச்சி மாவட்டம் எலூர்பட்டி, தொட்டியம், முசிறி ஆகிய இடங்களில் முதல்வர் பழனிச்சாமி காரை விட்டு கீழே இறங்கி விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள் ஆகியோரின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். திருச்சி மாவட்ட எல்லையான வால்வேல்புதூரில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு முதல்வர் பழனிச்சாமிக்கு பூச்சென்டு கொடுத்து வரவேற்றார். தொட்டியத்தில் வெற்றிலை, வாழை விவசாயிகள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வருக்கு விவசாயிகள் பொன்னாடை அணிவித்து நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து முசிறி நகருக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பெண்கள் கற்பூரம் ஏந்தியும், கும்ப மரியாதை கொடுத்தும் வரவேற்றனர். காரை விட்டு கீழே இறங்கிய முதல்வர் வரவேற்பை ஏற்றுக் கொண்டு முசிறி கைகாட்டி அண்ணா சிலையில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று பொது மக்களை சந்தித்தார். பெண்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்பு காரில் ஏறி புறப்பட்டார். அய்யம்பாளையம், குணசீலம், நொச்சியம், நெ.1 டோல்கேட் ஆகிய இடங்களிலும் முதல்வரை பொதுமக்களும், அ.தி.மு.க.வினரும் அன்புடன் வரவேற்றனர். பின்னர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக திருச்சி மாநகருக்குள் புகுந்து டி.வி.ஸ் டோல்கேட்டில் உள்ள மன்னார்புரம் அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்து சிறிது நேரம் தங்கி ஓய்வு எடுத்தார். அவருடன் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆகியோரும் உடன் இருந்தனர். அதன் பின்பு முதல்வர் பழனிச்சாமி தஞ்சாவூர் திருமண நிகழ்ச்சிக்கு புறப்பட்டார்.

 தஞ்சாவூர் செல்லும் வழியில் திருவெறும்பூர், துவாகுடி, செங்கிப்பட்டி, வல்லம் ஆகிய இடங்களில் டெல்டா விவசாயிகள் பச்சைத் துண்டுடன் வரவேற்றனர். முன்னதாக பெல் தொழிற்சாலை ஊழியர்கள் சீருடையுடன் கைத்தட்டி வரவேற்றனர். தஞ்சை திருமண நிகழ்ச்சியை முடித்து கொண்டு மீண்டும் திருச்சிக்கு வந்தார் முதல்வர் பழனிச்சாமி. அங்கு தங்கி ஓய்வு எடுத்தப் பின் மாலையில் சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து