முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2018-ல் நடந்த ‘நீட்’ தேர்விலும் முறைகேடு சென்னை மருத்துவ கல்லூரி மாணவரிடம் விசாரணை

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக சென்னை மருத்துவக்கல்லூரி ‘டீன்’ ஜெயந்தி புகார் அளித்ததை தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரையும், அவரது தந்தையையும் பிடித்து  சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

2019-ம் ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்டம் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகார் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மருத்துவக் கல்லூரியில் இருந்து இந்த முறைகேடு தொடர்பாக பூகம்பம் வெடித்தது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. ஜாபர் சேட்டின் நேரடி மேற்பார்வையில் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த முறைகேட்டில் புதிய பூகம்பம் ஒன்று தாக்கி உள்ளது. அதாவது கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக சென்னை மருத்துவக்கல்லூரி ‘டீன்’ ஜெயந்தி சி.பி.சி.ஐ.டி போலீசில் புதிய புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனு அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். அந்த புதிய வழக்கு அடிப்படையில் சென்னை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரையும், அவரது தந்தையையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த புதிய வழக்கு மூலம் ‘நீட்’ தேர்வு முறைகேட்டில் மீண்டும் ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து