ஐ.பி.எல். 2020 : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் மீண்டும் கேப்டனாக நியமனம்

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020      விளையாட்டு
david warner 2020 02 27

மும்பை : ஐ.பி.எல். 2020 சீசனில் டேவிட் வார்னர் கேப்டனாக செயல்படுவார் என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். ஐ.பி.எல். தொடரில் இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது தலைமையில் அந்த அணி 2016-ல் சாம்பியன் பட்டம் வென்றது.தென்ஆப்பிரிக்கா தொடரின்போது வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஓராண்டு தடைபெற்றார். இதனால் ஐ.பி.எல். 2018 சீசன் முழுவதும் விளையாடவில்லை. கடந்த சீசனில் விளையாடினார். ஆனால் கேப்டனாக நியமிக்கப்படவில்லை. புவனேஷ்வர் குமார் கேப்டனாகவும், கேன் வில்லியம்சன் துணைக் கேப்டனாக செயல்பட்டனர். இந்நிலையில் ஐபிஎல் 2020 சீசனில் வார்னர் தான் கேப்டனாக செயல்படுவார் என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தெரிவித்துள்ளது. இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில், மீண்டும் அணியை வழிநடத்தும் வாய்ப்பை வழங்கியதற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து