முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - அமெரிக்க ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் கவலை

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் இந்த பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் என பாகிஸ்தான் குற்றச்சாட்டியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் முறையாக கடந்த 24-ம் தேதி அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார். தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் போது டிரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தனது பயணத்தின் இறுதி நாளான 25-ம் தேதி பிரதமர் மோடி - டிரம்ப் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை வழங்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் வழங்கினார். இந்த கொள்முதல் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையேயான ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஆயிஷா பாரூகி கூறுகையில், ஏற்கனவே நிலையற்ற தன்மையில் உள்ள பிராந்தியத்தை அமெரிக்கா - இந்தியா இடையேயான இந்த ஒப்பந்தம் மேலும் சீர்குலைத்து விடும். பாகிஸ்தான் மட்டுமல்லாமல் இந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளிடையேவும் மிகவும் ஆக்ரோஷமான தன்மையை பின்பற்றும் இந்தியா குறித்து உலக நாடுகளுக்கு நாங்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து