முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்று சேருங்கள்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

பாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்றுசேருங்கள் என்று கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவுறுத்தி உள்ளார்.

மாமல்லபுரம் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:

நான்கு வகையான கோயில் நினைவுச் சின்னங்கள் ஒரே இடத்தில் இருக்கும் அபூர்வமான யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடமாக மாமல்லபுரம் உள்ளது. கட்டிடக் கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி அமைப்பதற்கு இதைவிடச் சிறந்த இடம் வேறு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பரதநாட்டியத்தின் பிறப்பிடமாகவும், சாஸ்திரிய சங்கீத பாரம்பர்யம் மிகுந்த இடமாகவும், இந்தியாவின் பல வகையான கலாச்சாரங்களின் வளமைகளைக் கொண்டதாகவும் தமிழகம் உள்ளது. இந்தியாவில் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மொழியாக தமிழ் உள்ளது. தமிழகத்தில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில் போன்ற பெரிய கோயில்கள், நம்முடைய கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலையின் மேன்மையான திறமைகளைப் பறைசாற்றும் சாட்சிகளாக உள்ளன.

இந்த நினைவுச் சிற்பங்கள் மாணவர்களின் கற்பனையைத் தூண்டிவிடுவதாக இருக்க வேண்டும். இதை உருவாக்கியவர்களிடம் இருந்து நமது பொறியியல் மாணவர்கள் உத்வேகம் பெற வேண்டும். 21-ஆம் நூற்றாண்டில் கட்டிடக் கலை நிபுணர்கள் மற்றும் திட்டமிடல் நிபுணர்களின் பங்களிப்பு வெறுமனே வடிவமைப்பு செய்வது, மக்கள் குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களுக்கு வடிவம் கொடுப்பதாக மட்டும் இல்லை. இன்றைய உலகில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்காற்றி வருவதால், வேகமாக மாறி வரும் உலகின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு கட்டிடக் கலை நிபுணர்கள் புதுமை சிந்தனையாளர்களாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. கட்டிடக் கலையில் பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தை ஒன்று சேர்த்து, சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையிலும், நீடித்த பயன் தரக் கூடிய வகையிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நகர்ப்புற மையங்களில் உள்ளதைப் போன்ற வசதிகளை கிராமப் பகுதிகளிலும் உருவாக்க வேண்டியது முக்கியம்.  உங்களுடைய துறையில் முன்மாதிரிகளை உருவாக்குபவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் நீங்கள் ஆக்கபூர்வ பங்காளர்களாக இருக்க வேண்டும். சிற்பிகளுக்குப் பயிற்சிகள் கொடுத்து, திறன்களை வளர்ப்பதன் மூலம் பழங்கால, கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதலில் இந்தக் கல்லூரி முக்கியப் பங்காற்றுகிறது. தனித்துவமான அம்சங்கள் காரணமாக, மாமல்லபுரத்தில் கைகளால் உருவாக்கப்படும் கல் சிற்பங்களுக்கு 2017-ல் புவிசார் குறியீடு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. பாரம்பரியமான ஞானத்தை, நவீன அறிவியலுடன் சரியாக சேர்த்து, உங்களுடைய துறைகளில் மேன்மை நிலையை எட்டுவீர்கள் என்றும் நம்புகிறேன்.இவ்வாறு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து