மாணவியர், பெற்றோர், பள்ளி ஆசிரியர் ,கல்வி கற்ற பள்ளிக்கூடத்தின பெருமைகளை உயர்த்தவேண்டும் சட்டமன்ற உறுப்பினர் எம் சந்திரபிரபா முத்தையா பேச்சு.

3 vnr cycle news

 ஸ்ரீவில்லிபுத்தூர்-ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் உள்ள இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும் எம் என் ஆர்டி மேல்நிலைப்பள்ளி, தியாகராஜ மேல்நிலைப்பள்ளி, புனித இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி எம் எஸ் மேல்நிலைப்பள்ளி ,மங்காபுரம் மேல்நிலைப்பள்ளி ஆகிய மேல்நிலைப்பள்ளிகளில்  ஆயிரத்து இருநூறு மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இந்து மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் பள்ளி செயலாளர் கிருஷ்ணன் தலைமையில்  நடைபெற்றது.   இந்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் வரவேற்றுப் பேசினார் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா விழாவில் கலந்துகொண்டு பதினொன்றாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசும்போது மாணவ மாணவ செல்வங்களே நீங்கள் தடையில்லாமல் கல்வி பயில அம்மாவின் அரசு 14 வகையான உபகரணங்களை வழங்குகிறது தமிழகத்தில் அம்மாவின் பொற்கால ஆட்சி நடத்தும் இபிஎஸ் , ஓபிஎஸ்  மாணவ மாணவி கண் மணிகளுக்கு தொடர்ந்து பல கல்விக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர் நீங்கள் வாழ்க்கையில் உயர  கல்வி கற்க வேண்டும்  உங்கள் பெற்றோர் பள்ளி ஆசிரியர் கல்வி தந்த பள்ளிக்கூடத்தின் பெருமைகளை உயர்த்த பாடுபட வேண்டும் நீங்கள் நன்றாக படித்து ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி உயர வேண்டும் எதிர்வரும் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று  சாதனை படைக்க வேண்டும் நீங்கள் வாழ்வில் உயர்ந்தால் சமுதாயம் உயரும் என்று பேசினார் விழாவில் கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் முத்தையா நகரச் செயலாளர் இன்பத்தமிழன் பள்ளி கமிட்டி தலைவர் மலையன் உறுப்பினர்கள் ஸ்ரீதரன் ,சுப்பிரமணியன், கிருஷ்ணன் ,திருமலை ,வெங்கட்ராமன், அக்ரோ தலைவர் கருமாரி முருகன் ,முன்னாள் நகர செயலாளர் முத்துராஜ் ,கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்ரமணியம் மாவட்ட கவுன்சிலர் கணேசன் தலைமையாசிரியர்கள் முருகன், கணபதி ,வசந்தா மேரி ,ஜாம் ஜெபராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் முடிவில் எம் என் ஆர்டி பள்ளி தலைமையாசிரியர் பார்வத வர்த்தினி நன்றி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து