முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்மில் இல்லாத போது எது செய்தாலும் பலன் கிடைப்பதில்லை -கோலி குறித்து சேவாக் கருத்து

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் கேப்டன் வீராட் கோலி சரியாக விளையாடவில்லை. இது குறித்து மூத்த வீரர் கபில்தேவ், வயது காரணமாக  பந்தை கணிப்பதில் கோலியின் பார்வையும், கைகளும் ஒருங்கிணைந்து செயல்படாததால் அவர் நியூசி. தொடரில் சரியாக ஆடவில்லை. அதற்கான பயிற்சியை மேற்கொண்டால் அதனை சரி செய்து விடலாம் என்று  ஆலோசனை தெரிவித்திருந்தார். கூடவே வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், விவியன் ரிச்சர்ஸ்ட்ஸ் என பல  வீரர்கள் இது போன்ற பிரச்னைகளை  சந்தித்துள்ளனர்’ என்றும் கூறியிருந்தார். 

இந்நிலையில் வீரேந்திர சேவாக், ‘ கோலிக்கு  கண், கை ஒருங்கிணைப்பு பிரச்னை இல்லை. அது ஒருநாளில் நிகழ்வதில்லை. படிப்படியாக தான் கண்,கை ஒருங்கிணைப்பு பிரச்னை ஏற்படும். பார்மில் இல்லாத போது எது செய்தாலும் பலன் கிடைப்பதில்லை. அதுதான் இப்போது கோலிக்கு உள்ள பிரச்னை. அதிர்ஷ்டம் கூட அவரை கைவிட்டு விட்டது. எந்த பந்தை அடிப்பது, எந்த பந்தை விட்டு விடுவது என்பது முக்கியமானது. நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கும் போது அதை சரியாக கணிக்க முடியும். அழுத்தம் இருக்கும் போது அப்படி கணிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து