முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு திரும்புகிறார் ஹர்திக் பாண்டியா

சனிக்கிழமை, 7 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்திய அணிக்கு திரும்புகிறார் ஹர்திக் பாண்டியா. குறிப்பாக ஹர்திக் பாண்டியா காயத்துக்கு பிறகு அசுரத்தனமாக மீண்டெழுந்துள்ளார், 39 பந்துகளில் 101 ரன்களை விளாசியதோடு பவுலிங்கில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாண்டியா பிறகு ஷ்ரேயஸ் அய்யர் தலைமை பாரத் பெட்ரோலியம் அணிக்கு எதிராக 58 பந்துகளில் 6 பவுண்டரிகள் 20 சிக்சர்களுடன் 158 ரன்களை விளாசி நான் தயார், நான் தயார் என்று மட்டையின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். ஷிகர் தவண் தோள்பட்டைக் காயத்திலிருந்தும் புவனேஷ்வர் குமார் ஹெர்னியா அறுவைச் சிகிச்சையிலிருந்தும் குணமடைந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் ஒருநாள் தொடரில் தட்டுத் தடுமாறி வரும் இந்திய அணியை மீட்க பாண்டியா, ஷிகர் தவண், புவனேஷ்வர் குமார் ஆகியோருடன் ரோஹித் சர்மாவின் வருகையும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து