முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி டிராபி இறுதி போட்டி: புஜாராவை வீழ்த்த எங்களுக்குத் தெரியும் என்கிறார் சகா

ஞாயிற்றுக்கிழமை, 8 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் சவுராஷ்டிரா அணியின் முக்கிய பேட்ஸ்மேனான புஜாராவை வீழ்த்துவது எப்படி என்று எங்களது பந்து வீச்சாளர்களுக்கு தெரியும் என சகா தெரிவித்துள்ளார்.

ரஞ்சி டிராபி இறுதி போட்டி இன்று தொடங்குகிறது. இதில் சவுராஷ்டிரா - பெங்கால் அணிகள் மோதுகின்றன. சவுராஷ்டிரா அணிக்காக புஜாராவும், பெங்கால் அணிக்காக சகாவும் விளையாட இருக்கின்றனர்.13 ஆண்டுகளாக முதல்-தர கிரிக்கெட்டில் விளையாடி வரும் சகாவுக்கு இதுதான் முதல் இறுதி போட்டியாகும். இறுதி போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கும் சகா, புஜாரா மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று நினைக்கிறார். என்றாலும் புஜாராவை எப்படி வீழ்த்த வேண்டும் என்று எங்களது பந்து வீச்சாளர்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சகா கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் வெற்றிக்காக போராடுவார்கள். பெங்கால் அணி வீரர்கள் சர்வதேச போட்டிகள் எல்லாவற்றையும் பார்த்து இருப்பார்கள். அவர்கள் புஜாராவை எப்படி வீழ்த்த வேண்டும் என்று அறிந்திருப்பார்கள்.முன்னதாக பெங்கால் அணி நாக்அவுட் சுற்றுக்கு சில வீரர்களின் அடிப்படை பெர்பார்மன்ஸ்-ஐ வைத்து முன்னேறி இருந்தது. உதாரணத்திற்கு எதிர்பக்கம் எந்தவொரு ஆதரவும் இன்றி ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்த டிண்டாவை பயன்படுத்தியிருப்போம். இது அணிக்கு சற்று பாதகமாக அமைந்தது. தற்போது ஒவ்வொரு வீரர்களும் அணிக்காக தங்களது பங்களிப்பை கொடுக்கிறார்கள்.பந்து வீச்சாளர்கள் தற்போது பேட்டிங்கிலும் பங்களிப்பை கொடுக்கிறார்கள். பேட்டிங் துறையில் இருந்துதான் வெற்றிக்கான திறன் வரும். சிறந்த நட்புணர்வு அணிக்கு வெற்றி தேடிக்கொண்டு உதவியாக இருக்கும்.நான் முதன்முறையாக இறுதி போட்டியில் விளையாட இருக்கிறேன். இது அடிக்கடி வருவதல்ல. எங்கள் அணியில் மனோஜ் திவாரிக்கு மட்டும் இறுதி போட்டியில் விளையாடிய அனுபவம் உள்ளது. நியூசிலாந்தில் இருக்கும்போது அணியின் திறனை நானும் ஷமியும் கண்காணித்துக் கொண்டிருந்தோம்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து