யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பணத்திற்கு எந்த பாதிப்பும் வராது - அதிகாரிகள் உறுதி

திங்கட்கிழமை, 9 மார்ச் 2020      வர்த்தகம்
YES BANK LOGO 2020 03 09

யெஸ் வங்கி முறைகேட்டால் வாடிக்கையாளர்கள் பணத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘யெஸ்’ வங்கி முறைகேட்டால் வாடிக்கையாளர்கள் தங்கள் பணம் பறிபோகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஆனால் பணத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.வங்கிகள் திவாலாகுவதும், நெருக்கடிக்குள்ளாகுவதும் இது முதல்முறை அல்ல. ஏற்கனவே கடந்த காலங்களில் இவ்வாறு பல வங்கிகள் தடுமாறி உள்ளன. 1969-ல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அதன்பிறகு 6 வங்கிகள் 1980-ல் தேசிய மயமாக்கப்பட்டது. அதில் நியூ பேங்க் ஆப் இந்தியாவும் ஒன்று. பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வந்த ‘நியூ பேங்க் ஆப் இந்தியா’ செயல்பட முடியாமல் 1993-ல் பஞ்சாப் வங்கியுடன் இணைக்கப்பட்டது.‘லெட்சுமி கமர்சியல் பேங்க்‘ திவாலாகி கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது.

பேங்க் ஆப் தமிழ்நாடு திவாலாகி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டது. குளோபல் டிரஸ்ட் பேங்க் திவாலாகி பொதுத்துறை வங்கியான ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் என்ற வங்கியுடன் இணைக்கப்பட்டது. அப்போதெல்லாம் பணம் பறி போனதில்லை.தனியார் துறை வங்கிகளோ, பொதுத்துறை வங்கிகளோ செயல்பட முடியாமல் வேறு வங்கிகளுடன் இணைக்கப்படும் போது டெபாசிட்தாரர்களின் பணம் பாதுகாக்கப்பட்டது.அதேபோல்தான் ‘யெஸ்’ வங்கியில் உள்ள பணமும் பாதுகாக்கப்படும். வாடிக்கையாளர்கள் அச்சப்பட தேவையில்லை என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து