முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு வாழைப்பழத்துக்காக மோதி கொண்ட நூற்றுக்கணக்கான குரங்குகள்

வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2020      உலகம்
Image Unavailable

பாங்காக் : கொரோனா வைரஸ் காரணமாக உணவு கிடைகாமல் ஒரு வாழைப்பழத்துக்காக நூற்றுக்கணக்கான குரங்குகள் மோதிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்தின் மத்திய பகுதியில் உள்ள லோப்புரி நகர் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இந்த நகரில் ஆயிரக்கணக்கான குரங்குகள் வசித்து வருகின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவு அளிப்பது வழக்கம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக லோப்புரி நகரில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் குரங்குகள் உணவு கிடைக்காமல் பசியில் அல்லாடுகின்றன. யாராவது உணவு அளிக்க மாட்டார்களா என குரங்குகள் தனித்தனியாகவும் குழுவாகவும் சாலையில் உலா வருகின்றன. இந்த நிலையில் கடந்த புதனன்று சுற்றுலா பயணி ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு குரங்கிடம் ஒரு வாழைப்பழத்தை வீசினார். இதை பார்த்ததும் சாலையில் உலாவிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான குரங்குகள் ஓடி வந்தன. கிடைத்த ஒரு பழத்தை யார் உண்பது என்பதில் குரங்குகளிடம் கடும் போட்டி ஏற்பட்டது. பழத்துக்காக நூற்றுக்கணக்கான குரங்குகள் கடுமையாக மோதிக் கொண்டன. மொத்த குரங்கு கூட்டமும் சாலைக்கு வந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின்னர் வாழைப்பழத்தை ஒன்றிடம் இருந்து ஒன்று பறித்துக் கொண்டே குரங்குகள் அனைத்தும் ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்றன. ஒரு வாழைப்பழத்துக்காக நூற்றுக்கணக்கான குரங்குள் மோதிக்கொண்டதை அங்கிருந்த நபர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து