முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்கறிஞர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு: மலேசிய முன்னாள் பிரதமருக்கு எதிரான புகார் மீது விசாரணை நடக்கவில்லை

வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2020      உலகம்
Image Unavailable

கோலாலம்பூர் : வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக 2009-ம் ஆண்டில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை (1எம்.டி.பி.) அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் தொடங்கினார். இந்நிறுவனத்தின் பல கோடி நிதியை ரசாக் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்து முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டை ரசாக் மறுத்தார்.

இந்நிலையில் 2018-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நஜீப் தலைமையிலான கட்சி தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்று, மகாதிர் முகமது பிரதமரானார். இதையடுத்து, நஜீப் ரசாக் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், இந்த வழக்கு மந்தமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரசாக் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வராததால் இந்த வழக்கில் நேற்று முன்தினம் விசாரணை நடைபெறவில்லை. ரசாக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல் நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டது. அப்போது இது குறித்த மருத்துவரின் கடிதத்தை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் தெரிவித்தனர். மலேசியாவில் இந்த வைரஸால் இதுவரை 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து