பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயருகிறது

சனிக்கிழமை, 14 மார்ச் 2020      வர்த்தகம்
Petrol-Diesel rate 2020 03 14

புது டெல்லி : மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியதால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறிய அளவிலேயே இந்த மாற்றம் இருந்தது. சர்வதேச சந்தை நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலையை பெருமளவு குறைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயர்த்தும் அளவிற்கு மத்திய அரசு கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் நேற்று காலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய் 57 காசுகளுக்கும், டீசல் 66 ரூபாய் 2 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து