மதுரையில் அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

15 carona virus

மதுரை, - மதுரை மாவட்டத்தில் பஸ் நிலையங்கள் மற்றும் பஸ் டெப்போக்களிலும் கிருமி நாசினி மருந்துகளை தெளிக்கும் முயற்சிகளில் போக்குவரத்து அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கொரே£னா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.மாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியுள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவக்குழு வினர் தயார் நிலையில் உள்ளனர்.மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது.ரெயில் நிலையத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு, அந்த பகுதியில் சுத்தம், சுகாதாரம் பராமரிக்கப்படுகிறது.
இதேபோல் மதுரை மாவட்டத்தில் பஸ் நிலையங்கள் மற்றும் பஸ் டெப் போக்களிலும் கிருமி நாசினி மருந்துகளை தெளிக்கும் முயற்சிகளில் போக்குவரத்து அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் பொன்மேனி, கே.புதூர், எல்லீஸ்நகர், மேலூர், பசுமலை, திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, மாடக் குளம், உசிலம்பட்டி, செக் கானூரணி உள்பட 14 இடங்களில் அரசு பஸ் டெப்போக்கள் உள்ளன. கே.புதூர் சிப்காட் டெப்போவில் இருந்து வெளியூர் செல்லும் அரசு விரைவு பஸ்கள் இயக்கப் படுகின்றன.இங்கிருந்து புறப்படும் விரைவு பஸ்களில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமிநாசினி தெளிக் கப்பட்டு வருகிறது. கே.புதூர் சிப்காட் டெப்போவில் இருந்து தினந்தோறும் 91 அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மதுரை டெப்போவில் இருந்து புறப்படும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து