முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈட்டி எறிதல் வீரர்கள் நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங் இந்தியா திரும்புகிறார்கள்

புதன்கிழமை, 18 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

அங்காரா : கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக துருக்கி எல்லையை மூட இருப்பதால் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா அவசரமாக இந்தியா திரும்புகிறார்.

இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. 22 வயதான சோப்ரா தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியின்போது 87.86 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவதற்காக துருக்கியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. மனிதர்கள் தன்னிச்சையாகவே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நிலை ஏற்பட்டு வருகிறது.இதனால் பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டு எல்லைகளை மூடி தயாராகி வருகின்றன. துருக்கி இன்றோடு தனது நாட்டு எல்லையை மூடப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் நாளையில் இருந்து துருக்கிக்கு செல்லவோ அல்லது அங்கிருந்து வரவோ முடியாது. இந்நிலையில் நீரஜ் சோப்ரா பயிற்சியை நிறுத்திவிட்டு உடனடியாக இந்தியா திரும்புகிறார். இன்று அவர் இந்தியா வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல் மற்றொரு வீரரான ஷிவ்பால் சிங் தென்ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்புகிறார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து