முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் தென்ஆப்பிரிக்கா திரும்பிய கிரிக்கெட் வீரர்கள் - தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொள்கின்றனர்

புதன்கிழமை, 18 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

கேப்டவுன் : கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக இந்திய கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதால், தென்ஆப்பிரிக்கா அணி சொந்த நாடு திரும்பியுள்ளது.

தென்ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. கடந்த 12-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் முதல் போட்டி நடக்க இருந்தது. இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அடுத்த நாள் 2-வது போட்டிக்காக தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் லக்னோ சென்றடைந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பீதியால் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டது.இதனால் தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் சொந்த திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்தியாவில் இருந்து புறப்பட்ட அவர்கள் நேற்று காலை தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தனர். பெரும்பாலான நாடுகள் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் அவர்களாகவே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதில் தென்ஆப்பிரிக்காவும் ஒன்று.

இதனால் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் தன்னைத்தானே 14 நாட்கள் தனிமைப்படுத்த இருக்கிறார்கள். இதை தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் தலைமை மருத்துவ அதிகாரி மஜ்ரா கூறுகையில், இந்தியாவில் இருந்து திரும்பிய வீரர்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு சமூக இடைவெளியில் 14 நாட்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் இது அவர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க சரியான வழிமுறையாக இருக்கும் என நினைக்கிறேன்.இந்த காலக்கட்டத்தில் அவர்களில் யாருக்காவது அறிகுறி தென்பட்டால் அல்லது கவலை அளிக்கும்படி இருந்தால், அதற்கு ஏற்றபடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து