முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோ - சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டார்

புதன்கிழமை, 18 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

மும்பை : கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு வீடியோவை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் வெளியிட்டுள்ளார்.
சீனாவில் உருவான அந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.தினமும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கிறது. குறிப்பாக தற்போது இத்தாலி, ஸ்பெயின், ஈரான் ஆகிய 3 நாடுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.உலகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 823 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 984 ஆக உயர்ந்தது. பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலக சுகாதார அமைப்பு பிரபலங்களை வைத்து விழிப்புணர்வை செய்து வருகிறது. தற்போது முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் தெண்டுல்கரை வைத்து விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது. தெண்டுல்கர் கைகளை சுத்தமாக கழுவுவதை போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து