முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக்கை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது - ஜப்பான் பிரதமர்

திங்கட்கிழமை, 23 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

டோக்கியோ : கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக டோக்கியோ ஒலிம்பிக்கை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது என்று ஜப்பானின் பிரதமர் ஒப்புக் கொண்டார்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 32 - வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 - ந்தேதி முதல் ஆகஸ்டு 9 - ந்தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா என்ற கொடிய வைரசின் பாதிப்பு உலகம் முழுவதும் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதால் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்று ஒரு பக்கம் சந்தேகம் நிலவினாலும், அதற்கான ஏற்பாடுகளை ஜப்பான் அரசாங்கமும், ஒலிம்பிக் கமிட்டியினரும் ஜரூராக செய்து வருகின்றனர்.

ஆனால் கொரோனா வைரஸ்பீதியால் பல்வேறு நாடுகள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதில் இருந்து விலகி உள்ளன. கனடாவின் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குழுக்கள் தங்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொது மக்களின் ஆரோக்கியத்தை மேற்கோள் காட்டி இந்த கோடையில் நடத்தப்பட்டால் விளையாட்டுகளுக்கு அணிகளை அனுப்ப மாட்டோம் என்று அறிவித்து உள்ளன.

ஜூலை 24 ஆம் தேதி திட்டமிடப்பட்டபடி 2020 போட்டி நடைபெறாது என முதல் முறையாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக டோக்கியோ ஒலிம்பிக்கை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது என்று ஜப்பான் பிரதமர் திங்களன்று ஒப்புக் கொண்டு உள்ளார்.

இது குறித்து ஜப்பான் பாராளுமன்றத்தில் ஷின்சே அபே பேசும் போது கூறியதாவது:-

ஒரு முழுமையான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் இது கடினமாகிவிட்டால், முதலில் விளையாட்டு வீரர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, ஒத்திவைப்பதற்கான முடிவை எடுப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.

ரத்து செய்வது ஒரு விருப்பமல்ல,விளையாட்டுகளை கைவிடமாட்டோம், இது எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்காது, யாருக்கும் உதவாதுஎன கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து