முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட டெண்டுல்கர், விராட் கோலி வேண்டுகோள்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனாவுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம், பிரதமரின் அறிவுரையை பின்பற்றுங்கள் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர் கூறியுள்ளனர்.

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். 21 நாட்களுக்கு வீட்டிலேயே இருங்கள், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். இது மட்டுமே கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஒரே தீர்வு என்று நாட்டு மக்களை அவர் உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு கிரிக்கெட் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எளிமையான விஷயங்களை செய்வது பெரும்பாலும் கடினம். ஏனெனில் அதற்கு நிலையான ஒழுக்கமும், மன உறுதியும் தேவையானதாகும். 21 நாட்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சின்ன விஷயம் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றும். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தனது டுவிட்டர் பதிவில், ‘பிரதமரின் அறிவுரைபடி 21 நாட்களுக்கு எல்லோரும் தயவு செய்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். சமூக விலகல் மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்க ஒரே வழி’ என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து