முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனா - இத்தாலியை பின்னுக்கு தள்ளி உலகளவில் அமெரிக்கா முதலிடம் : நியூயார்க் மருத்துவமனையில் படுக்கைக்கு தட்டுப்பாடு

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2020      உலகம்
Image Unavailable

கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவை விட, அமெரிக்காவில் அந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நியூயார்க் மருத்துவமனையில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 614 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 82 ஆயிரத்து 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 976 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் சீனா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் நிலை கொண்டுள்ளது. அந்நாட்டில் வைரஸ் பயங்கர வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் மட்டும் 260 - க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 1295 -ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முன்னணியில் இருந்த சீனா மற்றும் இத்தாலியை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் நியூயார்க் உள்ளிட்ட சில மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து