கொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2020      சினிமா
Prabhas 2020 03 27

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். 724 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பிரதமர் மோடி, கடந்த 24-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.

இதனால், அத்தியாவசிய சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் தவிர, ஏராளமான  நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன.  இதனால் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமான நிலையை  அடைந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதி மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், என பல்வேறு தரப்பினர் நிவாரண நிதி வழங்கி  வருகின்றனர். அந்த வகையில், பாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ. 4 கோடி நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு 3 கோடியும், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு  50 லட்சமும், தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும் வழங்கி உள்ளார். இதனை போல், நடிகர் பவன் கல்யாண்  ரூ. 2 கோடி, மகேஷ் பாபு, சிரஞ்சீவி ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளனர். ராம் சரண் 70 லட்ச  ரூபாயும், நிதின் 20 லட்சம் ரூபாயும், வருண் தேஜ் 10 லட்ச ரூபாயும் வழங்கி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து