முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடியிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி: தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 24-ம்  தேதி மாலை 6 மணி முதல் வருகிற ஏப்ரல் மாதம் 1-ம் தேதி  அதிகாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு (ஊரடங்கு) பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். தொடர்ந்து, பிரதமர் மோடி, கடந்த 24-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். அதன்படி, தமிழகத்திலும் ரயில், பஸ் போக்குவரத்து, அரசு, தனியார் அலுவலகங்கள்  வருகிற ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும்.

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் காலை சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர்  மோடியிடம் முதல்வர் விளக்கினார். அப்போது 144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்கவும், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பிரதமரிடம்  கூடுதல் நிதி ஒதுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து