முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்ய வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80ஜி-யின் கீழ் 100 சதவீத  வரிவிலக்கு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் நோயை உயிர்கொல்லி தோற்று நோய் என அறிவித்துள்ளது. அதே போன்று மத்திய அரசும் கொரோனா வைரஸை பேரிடர் தடுப்பு நோயாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது,

வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டு மக்களிடம் இருந்து பெறப்படும் நிவாரணத்திற்கும் விலக்கு அளிக்கப்படும். முதல்வர் நிவாரண நிதிக்கு தரப்படும் தொகைக்கு 100 சதவீதம் வருமான வரி விலக்கு உண்டு. ஏழை, எளிய மக்களை கஷ்டத்தில் இருந்து மீட்க மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து உதவி செய்ய வேண்டும். ரூ. 10 லட்சத்திற்கு மேல் நிதி உதவி செய்யும் நபர்கள், நிறுவனங்களின் பெயர்கள் பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பெறப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் தரப்படும்.

நன்கொடைகளை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் மின்னணு மூலமாக வழங்கலாம். சென்னை தலைமைச் செயலக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் செலுத்தலாம். வேளாண்மை, கட்டுமானம் மற்றும் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர் தினக்கூலி இழப்பினை சந்திக்கின்றனர். வங்கி இணைய சேவை, கடன் அட்டை மூலமாக செலுத்தலாம். ECS மூலமாக வங்கிகளுக்கு நேரடியாக அனுப்பலாம். மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக அனுப்பலாம்.  தற்போதைய நிலையில் முதல்வரை நேரில் சந்தித்து நன்கொடை வழங்க வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து