முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேஷன் கடைகளுக்கு 3-ம் தேதி விடுமுறை தற்காலிக ரத்து

சனிக்கிழமை, 28 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ரேஷன் கடைகளுக்கு 3-ம் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை ரத்து செய்யப்படுவதாக கூட்டுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்புநடவடிக்கையாக வரும் 14 ம் தேதி வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ரேஷன் கடைகள் மூலம் அனைத்து கார்டுதாரர்களுக்கும் ரூ. 1,000 நிதி உதவி மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான பருப்பு, பாமாயில் உட்பட்டவைகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் , இலவச பொருட்கள் மற்றும் நிதி உதவி வரும் 2-ம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.

இதனையடுத்து ரேஷன்கடைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் வார விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. எனவும் இதற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து