முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் எதற்கும் தயாராக இருக்க கேரள முதல்வர் வேண்டுகோள்

சனிக்கிழமை, 28 மார்ச் 2020      இந்தியா
Image Unavailable

நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்து உள்ளது. இதில் காசர்கோடு மாவட்டத்தில் மட்டும் 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு காரணம் இம்மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பலர் வந்தள்ளனர்.  இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கொச்சி அரசு மருத்துவமனையில் சிக்கி பெற்று வந்த 69 வயதான முதியவர் நேற்று உயிரிழந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்தோர், அரசு அறிவுரையின் பேரில் தனிமையில் இருக்கவில்லை. சமூக விலகலை முறையாக கடைபிடிக்காததால் நோய் பாதித்தவர்கள் மூலம் அவர்கள் சென்று வந்தவர்களும் நோய்க்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாகவே இங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து மாநில முதல்வர் பினராய் விஜயன் கவலை தெரிவித்து உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநிலத்தில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. நிலைமை படுமோசமாகி வருகிறது. பொதுமக்கள் அரசின் அறிவுரைகளை முறையாக கடைபிடிக்காததே இதற்கு காரணம். இது கவலை அளிப்பதாக உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் பொது வாழ்க்கையில் உள்ள ஒருவருக்கு நோய் அறிகுறி உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த நபர் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.

அவர் மூலம் பலருக்கும் இந்த நோய் பரவி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். அவர் பயணப்பட்ட பகுதிகளை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது. அதை தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.நோயை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும். இப்போதுள்ள நிலையை பார்க்கும் போது மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். தற்போது கேரளாவில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 683 பேர் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர். 616 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நோய் தடுப்பு பணிகளை நாம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். கியூபாவில் இருந்து மருந்துகளை வரவழைக்கவும், ரேபிட் பரிசோதனை மேற்கொள்ளவும் மத்திய அரசின் அனுமதியை கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து