முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டேஜ் மூன்றிற்குள் நுழைந்து விட்டது இந்தியா! அடுத்த 10 நாட்களுக்கு அதிகம் பேருக்கு தொற்று ஏற்படும் ஆபத்து: கொரோனா தடுப்புக்குழு அறிவிப்பு

சனிக்கிழமை, 28 மார்ச் 2020      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் கொரோனா பரவலின் ஸ்டேஜ் 3 துவங்கி விட்டது என்று கொரோனாவிற்கு எதிரான பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரிதர் ஞானி தெரிவித்துள்ளார்.

உலகமெங்கும் பரவிவரும் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் இரண்டு நாட்களில் வேகமெடுத்துள்ளது. இதுவரை 902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருபது பேர் உயிரிழந்துள்ளனர், வெறும் 83 பேர் குணமடைந்துள்ளனர். அதிகமாக கேரளாவில் 176 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 162 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு சிறப்புக்குழு ஒன்று தற்போது தீவிரமாக செயல்பட்டு சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்த குழுவின் தலைவரான கிரிதர் ஞானி,

கடந்த 24-ம் தேதியன்று பிரதமர் மோடியுடன் எங்களது அணி கலந்துரையாடியது. அதில் அரசு இன்னும் பழைய மருத்துவ முறையையே கையாண்டு கொண்டு வருகிறது என்பதை அறிந்து கொண்டோம். மேலும் இந்தியாவில் கொரோனாவின் எண்ணிக்கை அதிவேகத்துடன் அதிகரித்து வருகிறது. அடுத்த பத்து நாட்களில் இன்னும் அதிகம் பேருக்கு வரக்கூடும். இந்தியா ஏற்கனவே ஸ்டேஜ் மூன்றிற்கு சென்று விட்டது. இப்போது அறிகுறி இல்லாத நபர்களுக்கு வரும் நாட்களில் அறிகுறி தென்பட வாய்ப்புள்ளது. இதனால் திடீர் என்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசு இப்போதும் கூட இருமல், மூச்சு அடைப்பு, காய்ச்சல் உள்ளவர்களை மட்டும்தான் சோதனை செய்கிறது. இதை மாற்ற வேண்டும். இந்தியாவில் போதுமான மருத்துவமனை வசதிகள் இல்லை. ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறைந்தது 300 படுக்கைகள் இருக்க வேண்டும். டெல்லி போன்ற பெரிய நகரங்களில் குறைந்தது 3000 படுக்கைகளாகவது இருக்க வேண்டும். அப்போது தான் ஓரளவிற்கு சமாளிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

கொரோனா பரவல் மொத்தம் 4 வகைப்படும்.. ஸ்டேஜ் 1-ன்படி வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு ஒருவர் கொரோனா பாதிப்போடு வருவது, ஸ்டேஜ் 2 என்பது கொரோனாவோடு வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர், தனது வீட்டில் இருக்கும் உறவினர்களுக்கு வைரஸை பரப்புவது ஆகும். இது லோக்கல் டிரான்ஸ்மிஷன் எனப்படும். ஸ்டேஜ் 3 என்பது அந்த வெளிநாட்டு நபர் மூலம் அவரின் ஊரில் இருக்கும் நபர்கள், அப்படியே வெளி ஊரில் இருக்கும் நபர்கள் என்று வரிசையாக பலருக்கு கொரோனா பரவுவது ஆகும். இது கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன் எனப்படும். இதை கட்டுப்படுத்த முடியாது. ஸ்டேஜ் 4 என்பது இந்த கம்யூனிட்டி டிரான்மிஷன் பலருக்கு பரவி, யாருக்கு முதலில் தோன்றியது, எப்படி பரவியது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பல ஆயிரம் பேருக்கு பரவுவது. இது பென்டாமிக் (pandemic) டிரான்ஸ்மிஷன் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து