முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020      இந்தியா
Image Unavailable

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,000 ஐ தாண்டியுள்ளது. 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கி பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், மக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் அங்கு இங்குமாக சென்று வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸ் முதல் மற்றும் இரண்டாம் நிலையை கடந்து, சமூக தொற்று எனப்படும் அபாயகரமான 3-ம் கட்டத்தை அடுத்த 5 முதல் 10 நாட்களில் இந்தியா சந்திக்கும் என்று நிதி ஆயோக்கின் சிறப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில்,

நெடுஞ்சாலைகளில் மக்கள் நடந்து செல்ல தடை விதிக்க வேண்டும். மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை முழுமையாக மூட வேண்டும். இடம் பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியத்தை நிறுவனங்கள் வழங்க வேண்டும். இடம் பெயர்ந்து பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேறக் கூறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும். இடம்பெயர்ந்து படித்து வரும் மாணவர்களையும் வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கை மதிக்காதவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து