முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியல் வேர்ல்டு ஹீரோ: இந்திய வீரர் ஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

கொரோனாவுக்கு எதிராக களத்தில் பணியாற்றி வரும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மா ரியல் வேர்ல்டு ஹீரோ என ஐ.சி.சி. பாராட்டு தெரிவித்துள்ளது.

கடந்த 2007-ல் நடந்த 'டுவென்டி-20' உலக கோப்பை பைனலில் கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசி, இந்தியா கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக விளங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மாவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. தற்போது கொரோனா மேலும் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், அரியானாவின் ஹிசார் தெருக்களில் இறங்கி ,போலீஸ் அதிகாரியாக ஜோகிந்தர் சர்மா தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

கொரோனா தொற்றுக்கு எதிராக உலகமே போராடி வரும், சவாலான நேரத்தில் தன்னுடைய கடமையை சிறப்பாக ஆற்றி வரும் ஜோகிந்தருக்கு தலைவணங்குவதாக ஐ.சி.சி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. மேலும், 2007-ல் 'டுவென்டி-20' உலக கோப்பை ஹீரோ: 2020ல் ரியல் வேர்ல்டு ஹீரோ. கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு ஒரு போலீஸ்காரராக, இந்தியாவின் ஜோகிந்தர் சர்மா, சர்வதேச சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது கடமையை நிறைவேற்றி வருகிறார்  எனவும் கூறியுள்ளது. ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வெளியே நடமாட கூடாதென விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இது குறித்து ஜோகிந்தர் சர்மா கூறியதாவது: கடந்த 2007-ல் இருந்தே டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வருகிறேன். பொதுமக்கள் மத்தியில் பயம் இருப்பதால் போலீஸ் அதிகாரியாக, இது ஒருவகையான சவாலான பணி தான். இத்தனை ஆண்டுகால பணியில் சில சவால்களை சந்தித்துள்ளேன் என சொல்ல முடியும். வழக்கமாக எங்களுடைய பணி காலை 6 மணிக்கு துவங்கும். ரோந்து பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தேவையின்றி வெளியே நடமாடுவோரை வீட்டுக்கு அனுப்புவது, அடிப்படை மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு உதவுவது, உரிய காரணம் இன்றி ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை என பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து