முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மேலும் 2 பேர் குணமடைந்தனர்: டுவிட்டரில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 2 பேர் குணமடைந்தனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு  தமிழக அரசு தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 2 பேர் ஏற்கனவே குணமடைந்து வீட்டுக்குச் சென்று விட்டனர். இந்த நிலையில் மேலும் 2 பேர் குணமடைந்து, வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டனர் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 2 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். எனினும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் நாடு முழுவதும் இதுவரை 35,000 பேருக்கு கொரோனா நோய்க்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 113 பரிசோதனை நிலையங்களில் கொரோனா நோய் கண்டறியும் சோதனை நடைபெறுகிறது. தனியாருக்கு சொந்தமான மேலும் 47 பரிசோதனை நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 8 பேரும் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். இதில், 10 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 43,538 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து