முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் தகுதி சுற்றி பங்கேற்ற 3 குத்துசண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : லண்டன் ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்ற குரோசியாவைச் சேர்ந்த மேலும் 3 குத்துசண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதியாகி உள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 30 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். சுமார் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். துருக்கி நாட்டைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இருவரும் லண்டனில் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் பங்கேற்றவர்கள்.டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஐரோப்பிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டிகள் சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. 3 நாட்களுக்குப் பிறகு இந்தப் போட்டி நிறுத்தப்பட்டது. இந்த போட்டியில் கலந்து கொண்டு விட்டு துருக்கி திரும்பிய போதுதான் 2 வீரர்களை இந்த வைரஸ் தாக்கியுள்ளது.இதேப் போல தலைமை பயிற்சியாளருக்கும் இந்த நோய் தொற்று ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் ( ஐ.ஓ.சி.)மீது விமர்சனம் எழுந்தது. மருத்துவ எச்சரிக்கையை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்ற மேலும் 3 குத்துசண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதியாகி உள்ளது. இவர்கள் குரோசியா நாட்டைச் சேர்ந்தவர்கள்.இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டதால் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் லண்டன் குத்துச்சண்டை போட்டி அமைப்பாளரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து