முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஒத்திவைப்பு - அமைச்சர் காமராஜ்

திங்கட்கிழமை, 30 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருந்த “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

 
நாடு முழுவதும் வரும் ஜூன் மாதம் முதல் ஒரே நாடு, ஒரே ரே‌‌ஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், குடும்ப அட்டை (ரே‌‌ஷன் கார்டு) வைத்திருப்பவர்கள் எந்த மாநிலத்தில் உள்ள ரே‌‌ஷன் கடையிலும் சென்று பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.ஒரு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு ஒரே நாடு,ஒரே ரே‌‌ஷன் கார்டு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.அந்த வகையில், தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்து இருப்பவர்கள், மாநிலத்தில் உள்ள எந்த ரே‌‌ஷன் கடையிலும் பொருட்கள் வாங்க வகை செய்யும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் உள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு மாதத்திற்கு அமல்படுத்தப்பட்ட ஒரே நாடு,ஒரே ரே‌‌ஷன் கார்டு திட்டம் வெற்றிகரமாக அமைந்ததால் தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே ரே‌‌ஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, வரும் நாளை ஏப்ரல் 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறுகையில், தமிழகத்தில் ஏப்ரல் 1- ம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் தற்போதைக்கு இத்திட்டம் சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து