முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தினந்தோறும் 200 பேருடன் உரையாடும் பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 30 மார்ச் 2020      இந்தியா
Image Unavailable

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாள்தோறும் 200 பேருடன் மோடி தொலைபேசியில் பேசி தகவல் கேட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்கான பலன்கள் குறித்து அவர் நாள்தோறும் 200 பேருடன் தொலைபேசியில் பேசி தகவல் கேட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.மாநில கவர்னர்கள், முதல் -மந்திரிகள், மாநில சுகாதாரமந்திரிகள் ஆகியோருடன் அவர் பேசி வருகிறார். டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருடனும் பேசி, அவர்களது சேவையை பாராட்டி வருவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் ஆகியோருடனும் பேசி வருகிறார். அத்துடன், நாள்தோறும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருவதாகவும், மந்திரிசபை செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர், மந்திரிகள் குழுவினர் ஆகியோரிடம் தனித்தனியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை கேட்டு வருவதாகவும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து