அடுத்த 30 நாட்கள் மிக முக்கியமானது: டிரம்ப்

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2020      உலகம்
World-6 2020 03 31

Source: provided

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அடுத்த 30 நாட்கள் மிக முக்கியமானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 1,64,253 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். சுமார் 5,000-க்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளில் டிரம்ப் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 30-ம் தேதி வரை சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறும் போது, அடுத்த 30 நாட்களுக்குச் சவாலான நாட்கள் காத்துக் கொண்டிருக்கிறது. வரவிருக்கும் 30 நாட்கள் மிக முக்கியமானது. ஏனென்றால் நாம் மீண்டு வர வேண்டும். நாம் எவ்வளவு அர்ப்பணிக்கிறமோ அந்த அளவு விரைவாக இந்த நெருக்கடியிலிருந்து நாம் வெளிப்படுவோம். அந்த நேரத்திற்காகத்தான் நாம் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார். உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 37,000-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 காய்ச்சலுக்கு இத்தாலியும் ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து