அமெரிக்காவை சென்றடைந்த சீன உதவிப் பொருட்கள்

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2020      உலகம்
World-7 2020 03 31

Source: provided

வாஷிங்டன் : சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட  உதவிப் பொருள்கள் அமெரிக்காவின் நியூயார்க்கைச் சென்றடைந்தன.

உலகம் முழுவதும் கொரோனா நோய் பாதிப்பைச் சமாளிக்கும் இக்கட்டான நிலையில் ஜி-20 நாடுகள் குழுவின் சிறப்பு உச்சிமாநாடு கடந்த 26-ம் நாள் நடைபெற்றது. இதில், இந்த வைரசுக்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒருமித்த குரல் எழுந்தது.  சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் துணை அமைச்சர் ஷூ நன் பிங் கூறுகையில்,

கொரோனா நோய்க்கான தடுப்பூசி ஆய்வை விரைவுபடுத்தும் வகையில் இவ்வைரஸின் மரபணு வரிசையை உலகத்துடன் சீனா விரைவாக பகிர்ந்து கொண்டது. தற்போது, ஐந்து தொழில் நுட்ப வழிமுறைகளில் தடுப்பூசி ஆய்வை சீனா மேற்கொண்டு வருகிறது. இவை ஐந்திலும் சர்வதேச ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார். இதற்கிடையில், சீனா இயன்றளவில் பல்வேறு நாடுகளுக்கு மருத்துவ உதவி பொருட்களை வழங்கி வருகிறது. கடந்த 29-ம் நாள் காலை சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட  உதவிப் பொருள்கள் அமெரிக்காவின் நியூயார்க்கைச் சென்றடைந்தன. இத்தாலி வெளியுறவு அமைச்சர் லூயிஜி டி மாயோ கூறுகையில்,

கொரோனா நோய் வுகானில் பரவத் தொடங்கிய போது, இத்தாலி சீனாவுக்கு 40 ஆயிரம் முகக் கவசங்களை வழங்கியது. தற்போது சீனா எங்களுக்கு லட்சக்கணக்கான முகக் கவசங்களை அனுப்பியுள்ளது என்று தெரிவித்தார். ஈரான், ஈராக் முதலிய நாடுகளுக்குப் பொருள் உதவி வழங்குவதை மட்டுமல்ல, சீன மருத்துவ நிபுணர்கள் அண்மையில் மருத்துவப் பொருட்களுடன் பாகிஸ்தான், கம்போடியா, லாவோஸ் முதலிய நாடுகளுக்கு சென்றுள்ளனர். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜி-20 நாடுகள் குழுவின் சிறப்பு உச்சிமாநாட்டில் கூறியதை போல், நோய் எதிர்கொள்ளும் போது, உலக நாடுகள் உறுதியான நம்பிக்கை மற்றும் ஒற்றுமையோடு ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து