அடுத்த 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ. வங்கிகளால் வசூலிக்கப்படாது : தமிழக நிதித்துறை செயலர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2020      தமிழகம்
EMI 2020 03 31

Source: provided

சென்னை : அடுத்த 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ வங்கிகளால் வசூலிக்கப்பட மாட்டாது என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து கடைகளும், பேருந்து, ரயில் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் அளித்த பேட்டியில், 

அடுத்த 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ வட்டி உள்ளிட்டவை வங்கிகளால் வசூலிக்கப்பட மாட்டாது.ரிசர்வ் வங்கியின் உத்தரவு அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வங்கி வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து