முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட்டில் டக்வர்த் லூயிஸ் முறையை அறிமுகப்படுத்திய டோனி லூயிஸ் காலமானார்

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : கிரிக்கெட் போட்டிகளில் டக்வர்த் லூயிஸ் முறையை அறிமுகப்படுத்திய டோனி லூயிஸ் உடல்நலக்குறைவு காரணமாக லண்டன் மருத்துவமனையில் காலமானார்.

டோனி லூயிஸ்க்கு வயது 78. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர். உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். பின்னர் பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்தார். இதன் பிறகு பிராங் டக்வோர்த் என்ற கணிதவியல் நிபுணருடன் இணைந்து 1997 - ல் டக்வொர்த் லூயிஸ் முறை பிரபலமாக டி.எல். என்று அழைக்கப்படுகிறது. இது துடுப்பாட்ட பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் மற்றும் டி - 20 போட்டிகளில் ஆட்டம் வானிலை அல்லது பிற காரணங்களால் தடைபட்டால், இரண்டாவதாக ஆடும் அணிக்கான ஓட்ட இலக்கை கணிதவியலின் உதவியுடன் அறுதியிடும் (நிர்ணயிக்கும்) ஓர் முறையாகும்.

இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. 1999 - ம் ஆண்டு அதிகாரபூர்வமாக தனதாக்கிக் கொண்டது. 2014 - ல் இது டக்வொர்த் - லூயிஸ் ஸ்ட்ரெர்ன் என்று டி.எல்.எஸ் முறையாக பிரபலமானது. இவருக்கும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டோனி லூயிஸுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. 1992 உலகக்கோப்பையில் அரையிறுதியில் 13 பந்துகளில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை வர பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கும் போது டி.எல் முறைப்படி 1 பந்தில் 21 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட தென் ஆப்பிரிக்கா பரிதாபமாக வெளியேறிய கதையை அனைவரும் அறிவர்,

இது பாகிஸ்தானுக்கு சவுகரியமாகப் போனது. தென் ஆப்பிரிக்கா வந்திருந்தால் இம்ரான் கான் கோப்பையை வென்றிருக்க முடியாது. இங்கிலாந்தை பாகிஸ்தான் எளிதில் வீழ்த்தி விட்டது. இதனையடுத்தே ஸ்டீவன் ஸ்டெர்ன் என்பவர் இந்தக் கணக்கீட்டினை மாற்றி அமைத்தார். சர்ச்சைக்குரிய முறையாக இருந்தாலும் கிரிக்கெட்டில் இதற்கு இணையான ஒரு கணக்கீட்டு முறை இல்லை என்பதே பல வல்லுநர்களின் கருத்தாக இருந்து வருகிறது. இந்நிலையில் டக் வொர்த் லூயிஸின் பிதாமகர்களில் ஒருவர் மறைந்தார். டோனி லூயிஸ் மறைவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து